அஸ்வெசும நலன்புரிக்கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வறுமை நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி, வறிய நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 10,000 ரூபாவாகவும், மிக வறிய நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 17,500 ரூபாவாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here