ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதிக்கும் சபாநாயகர்..!
சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக தெரிவித்த கருத்து பொய்யானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். போலி முனைவர் பட்டம் என்பது ஆசியாவிலேயே மிகப் பழமையான பாராளுமன்றத்தையும் இந்த ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதிக்கும் செயலாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. “இலங்கையின் பாராளுமன்றம் ஆசியாவிலேயே முதன்மையானது மற்றும் முழு
சிரியா அரசிற்கு இடைக்கால பிரதமர் நியமனம்..!!
சிரியா அரசின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் மார்ச் 1, 2025 வரை அமுலில் இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் முன்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் தலைவராக பணியாற்றினார். சிரியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்த அல்-அசாத், கடந்த 8-ம் திகதி பதவியை விட்டு வெளியேறி நாட்டை விட்டும் வெளியேறினார்.
வட் வரியால் பாதிக்கப்பட்டுள்ள புத்தகத் துறை..!
புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வட் வரியை (VAT Tax) விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பிரேரணையை அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு பரிந்துரைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க தெரிவித்தார். “அரசாங்கத்திற்கு சில வாரங்களே உள்ளன. இந்த நேரத்தில் கோரிக்கைகளை
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு..!!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.50 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.19 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின்
பெருந்தோட்ட மக்களின் வீட்டுத் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்..!
பெருந்தோட்டங்களில் தனி வீட்டுத் திட்டங்களுக்குப் பதிலாக மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் தேயிலை நிலங்களைப் பாதுகாத்துக் கொண்டு பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்குடன் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக
ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு..!
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் மின்சார சபை ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதால் மின் கட்டண குறைப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்குக் கடந்த இரண்டு வருடங்களாக ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவில்லை. எனவே, டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக அவர்களுக்கு ஊக்குவிப்பு
ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் இணைந்து முல்லைத்தீவில் போராட்டம்..!
முல்லைத்தீவு மீனவர்களினால் இன்றைய தினம்(10) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாம் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள
மதுவரி ஆணையாளராக யு.எல். உதய குமார பெரேரா..!
புதிய மதுவரி ஆணையாளராகச் சிறப்புத் தர அதிகாரி யு.எல். உதய குமார பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளராக பணியாற்றியவர். மதுவரி ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய யு. டி. என். ஜயவீர, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு யு.எல். உதய குமார பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..!
2025 மார்ச் 31 வரை பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடனை செலுத்தத் தவறியதால், அவர்களின் சொத்துக்களை ஏலம் விடுவது இந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்றைய தினம்(10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர்
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்..!
தென்கொரியாவில் அவசரநிலை இராணுவச் சட்டத்துக்கு பரிந்துரைத்ததற்காக கைதான அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யாங் ஹயூன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மார்ஷல் சட்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக அறிவித்திருந்த அமைச்சர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை உயிரை மாய்ப்பதற்கு முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவை உலுக்கிய மார்ஷல் சட்டத்தின் பின்னர் இவர் ஏனைய