நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் திருமணம் செய்து கொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாகச் செய்திகள் பரவிய நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் உலா வரும் புகைப்படங்களும் வெளியாகின.

மேலும் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர். அதில் விரைவில் திருமணம் குறித்து வெளியிடுவோம் என்றும் கூறி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று(15) நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்க நாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

மேலும் தற்பொழுது சித்தார்த்-அதிதி தம்பதிக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here