ஹிந்தி சினிமாவை சேர்ந்த இயக்குநர் நிதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராமாயணா: பாகம் 1’. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்  செலவில் உருவான ராமாயணா படம் உலகம் முழுவதும் கடந்த 5ம் திகதி வெளியிடப்பட்டது.

ராமாயணா படம் வெளியானது முதல் இதுவரை 4 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. குறிப்பாக, தீபாவளி பண்டிகை தினமான நேற்று மாத்திரம் ராமாயணா திரைப்படம் இந்தியாவில் ரூ. 56 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here