ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதியைப் பெற்று முழுமையாக பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், அவர்களுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.








