ஈரானிய வான்வெளியில் பிரவேசித்ததாக கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் எனும் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானம் ஒரு “ஆளில்லா விமானம்” என அடையாளம் காணப்பட்டு, ஈரானிய எல்லைக்குள் நுழைந்த பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக IRGC கூறியதுடன், அமெரிக்காவால் மேலும் ஏதேனும் போர்நிறுத்த மீறல்கள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் பதிலடி கொடுக்கும் உரிமையை அது கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
“தற்காப்பு” நடவடிக்கைகள் எனக் தெரிவித்து ரொக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்க மேற்கொண்ட இராணுவத்தின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க மற்றும் ஈரான் இடையே ஒரு நிலையற்ற போர்நிறுத்தம் நீடித்து வரும் சூழலில் இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளது.
MQ-9 ரீப்பர் என்பது நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட ஒரு அமெரிக்க கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடாத்தும் ஆளில்லா விமானமாகும். இது முன்னர் சர்ச்சைக்குரிய மத்திய கிழக்கு வான்வெளியில் பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.







