யேமனின் கடலோர பகுதியில் பயணித்த ஜிப்ரால்டர் ஈகிள் என்ற அமெரிக்காவின் சரக்கு கப்பலொன்று ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் கட்டளை பீடம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (15) நடைபெற்ற இத்தாக்குதலால் கப்பலில் இருந்த இரும்புபொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் ஏடன் வளைகுடாவில் தொடர்ந்தும் பயணிக்கின்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செங்கடல் பகுதியில் இஸ்ரேலிற்கு செல்லும் அல்லது இஸ்ரேலிற்கு சொந்தமான கப்பல்களை தாக்குவதாக தெரிவிக்கும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாசிற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவே இந்த தாக்குதல்களை முன்னெடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவின் நாசகாரி கப்பலை நோக்கி ஏவிய ஏவுகணையை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here