
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் விமானத்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் பிரேசிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது.
விமானத்தில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் 88 பேரும் பிரேசிலுக்கு அழைத்து வரப்பட்டமை அவமதிப்பையும் கடந்து, மனித உரிமைகளை மீறும் செயல் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது
அத்தோடு , விமானத்தில்அமெரிக்காஇயக்கப்படவில்லை, குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை , விமானத்தினுள் அதிக வெப்பம் காரணமாக சிலருக்கு மயக்கமேற்பட்டுள்ளது, பயணிகள் கழிவறையை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படவில்லை என்று நாடு கடத்தப்பட்ட பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பயணிகளை மிக மோசமாக நடத்தியது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது.







