அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இண்டியோனாலா நகரில் உள்ள இரவு விடுதிக்கு அருகே ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான நோக்கம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் மேலும் சம்பவம் தொடர்பில் யாரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளதோடு.
நேரில் கண்ட சாட்சிகள் பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நேரடியாக சுடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







