அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளத்திற்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கும் இடையே அமைந்துள்ள அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல் அறுவடை முன்னாயத்த பணியில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்று சடுதியாக பிரதான வீதியை நோக்கி இரு வழி சாலையை மறித்து திரும்ப முற்பட்ட வேளை மறுமுனையில் இருந்து வேகமாக பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி காலில் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்களில் ஒருவருக்கு கை உடைந்துள்ளதாக விபத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்  இவ்விபத்து தொடர்பில் நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here