அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 11 அன்று நிகவெரட்டிய மற்றும் இப்பாகமுவவில் இரண்டு பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்.
மக்கள் ஆட்சி –”வலுவான இரண்டு ஆண்டுகள் அனைவருக்கும் முன்னேற்றம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் பேரணிகள், நிகவெரட்டியவில் பிற்பகல் 1 மணிக்கும், இப்பாகமுவவில் பிற்பகல் 3 மணிக்கும் இடம்பெறவுள்ளது.
நிகவெரட்டிய பேரணி பிற்பகல் 1 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.








