பொது நிதி மற்றும் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல், இலஞ்ச விசாரணைகளில் தலையீடு, நலன் முரண்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் எதிர்க்கட்சி சட்டமியற்றுபவர்களுக்கு எதிரான பாரபட்சம் உள்ளிட்ட 50 குற்றச்சாட்டுகளை கோடிட்டுக் காட்டி, நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த 12 பக்க பிரேரணையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லங்கள், நாடாளுமன்ற வாகனங்கள் மற்றும் எரிபொருள் பயன்பாடு, தனிப்பட்ட பணியாளர்களுக்கான செலவு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியதாகக் கூறப்படுவது குறித்த கவலைகளும் எழுப்பப்பட்டுள்ளன.

சபாநாயகர் விக்கிரமரத்ன மீது நாடாளுமன்றத்திற்கு இனி நம்பிக்கை இல்லை என்று அறிவித்து பிரேரணை நிறைவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக இந்த வாரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்க இருப்பதாக பிரதான எதிர்க்கட்சி முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here