ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக்க இன்று டெய்லி மிரர் ஊடகத்திடம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தவறான பணப்பரிமாற்றம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்றதாகவும், இதுகுறித்த விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிதியமைச்சின் கீழ் உள்ள நிதியை கையாளும் அமைப்புக்களில் இருந்து இணைய ஊடுருவல் மற்றும் தவறான கையாளுகை மூலம் அண்மையில் பல்வேறு வகையில் பண மோசடி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here