2024 ஆம் ஆண்டுக்கான T20 உலகக்கிண்ணத்தில் சுப்பர் 8 சுற்றிலிருந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற முதலாவது அணியாக இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ளது.

நேற்யைப் போட்டியில் அமெரிக்க அணியை வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றதுடன், அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

மேலும், இங்கிலாந்து அணி சார்பில் T20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் படைத்துள்ளார்.

பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியின் போதே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இப்போட்டியில் 19வது ஓவரை வீசிய ஜோர்டான் கோரி ஆண்டர்சன், அலி கான், நோஸ்துஷ் கென்ஜிகே மற்றும் சவுரப் நேத்ரவல்கர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் கோரி ஆண்டர்சன் தவிர ஏனைய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here