அத்துடன், அறுகம்பை பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில தரப்பினர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலங்களில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் முன்னதாக கைது செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் மேலும் ஒருவர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.








