இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (28) தாய்லாந்தின் பேங்கொக்கில் ஆரம்பமான ஐந்தாவது ஆசிய-பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டின் (MC-5) பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மாநாட்டு மையத்தில் (UNCC) நடைபெறும் இந்த மாநாடு, ஆசிய-பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (UNESCAP) மற்றும் தாய்லாந்து அரசாங்கத்தால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதற்கான உலகளாவிய முன்னேற்றத்தில் ஏற்பட்டுள்ள தொய்வை எடுத்துரைத்தார்.

நோய் தொடர்பான கண்காணிப்பை மேம்படுத்தவும், காலநிலை தொடர்பான சுகாதார அபாயங்களை மதிப்பிடவும், அனர்த்த தயார்நிலையை வலுப்படுத்தவும் மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தவும் தேசிய பொது சுகாதார அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நிதி மற்றும் திறன் வரம்புகளை எதிர்கொள்ளும் அபிவிருத்தி  நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் தொழில்நுட்பங்களின் நன்மைகளைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்துடன் தொழில்நுட்ப கருவிகள், நிபுணத்துவம் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்வதை எளிதாக்கவும், அதே நேரத்தில் நிறுவன திறனை மேம்படுத்தவும் வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்தக் மாநாட்டில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, பொது சேவை ஆணைக்குழு உறுப்பினர் பொறியியலாளர் (கலாநிதி) சனத் பனவென்ன மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here