ஸ்பெயினில் இன்று காலை இரண்டு ரயில்கள் மோதியதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாட்ரிட்டுக்கு தெற்கே மத்திய ஸ்பெயினில் அமைந்துள்ள டொலிடோ மாகாணத்தில் இந்த ரயில் விபத்து சம்பவித்துள்ளது.

மாகாண தலைநகரான டொலிடோ, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து தென்மேற்கே சுமார் 40 மைல் தொலைவில் உள்ளது, மேலும் மாட்ரிட்டை செவில்லுடன் இணைக்கும் பாதையில் பயணித்த இரண்டு ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளன. செவில் நகரம் டொலிடோ நகரிலிருந்து மேலும் தென்மேற்கே சுமார் 200 மைல் தொலைவில் உள்ளது.

நாட்டின் பிரதமர் இந்த விபத்தை “பாரதூரமான” சம்பவம் என விவரித்துள்ளார். ரயில்வே உள்கட்டமைப்பு மேலாளர் ADIF இன் கூற்றுப்படி, தலைநகர் மாட்ரிட்டை செவில்லுடன் இணைக்கும் பாதையில் பெட்டிகள் பயணித்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாட்ரிட் பிராந்தியத்தை அந்தலூசியாவுடன் இணைக்கும் அதிவேக ரயில் பாதை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் ஏற்பட்ட மூன்றாவது ரயில் பேரழிவு இதுவாகும். ஜனவரி மாதம், தெற்கு ஸ்பெயினின் கோர்டோபா மாகாணத்தில் உள்ள அடமுஸ் அருகே இரண்டு அதிவேக ரயில்கள் மோதியதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சில நாட்களுக்குப் பிறகு பார்சிலோனா அருகே பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here