மேக்ஸ் ஓப் மீடியா லிமிடெட் மற்றும் அதன் இணை நிறுவனங்களைச் இணைத்ததை தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கி (CBSL) தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பட்டியலை 27 ஆக நீட்டித்துள்ளது.

இன்று (28) வெளியிடப்பட்ட அறிக்கையில், மேக்ஸ் ஆப் மீடியா லிமிடெட், அதன் இணை நிறுவனங்களான மேக்ஸ் எல்கே (பிரைவேட்) லிமிடெட் மற்றும் மேக்ஸ் மீடியா லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டு, நடத்தி மற்றும் ஊக்குவித்ததாக விசாரணைகள் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தத் தீர்மானம் 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின், திருத்தப்பட்ட 83(C) பிரிவின் கீழ் எடுக்கப்பட்டது.

அதன்படி, புதிதாக அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மத்திய வங்கியின் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன, இதனால் அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் மொத்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முன்னதாக டியன்ஸ் லங்கா ஹெல்த் கேர் (பிரைவேட்) லிமிடெட், பெஸ்ட் லைப் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட், ஸ்போர்ட் செயின், OnmaxDT, MTFE, பாஸ்ட்வின் (பிரைவேட்) லிமிடெட், Qnet/Questnet, லெட்ஜர் பிளாக், பீகாயின் ஆப் மற்றும் TM  செயலி போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

மத்திய வங்கி அதன் நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களத்தின் ஊடாக வெளியிட்ட பொது அறிவிப்பில், வங்கிச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டங்கள் என தீர்மானிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here