ஆபத்தான மருந்து மாத்திரைகள் தொகையுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரும் மற்றுமொரு நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மிதிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களிடமிருந்து ஆபத்தான மருந்து வகையைச் சேர்ந்த 1,270 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியர் 70 வயதுடையவர் என்றும், அவர் தற்போது எல்பிட்டிய பகுதியில் தனியார் வைத்திய மத்திய நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மற்றைய சந்தேக நபர் 30 வயதுடைய தனியார் நிறுவனமொன்றின் சரக்கு போக்குவரத்தாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரின் பரிந்துரை இன்றி இந்த மருந்துகள் மருந்தகங்களில் வழங்கப்படாத காரணத்தினால், குறித்த வைத்தியர் தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப் பயன்படுத்தி மாத்தறை மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் இருந்து இந்த மருந்து தொகுப்பை கொள்வனவு செய்துள்ளார்.

பின்னர் அவற்றை எல்பிட்டிய பகுதிக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், மருந்து தொகை மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றுடன் இன்று (09) மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here