The powerful wind and rain of a hurricane pummel a building.

இந்தியப் பெருங்கடலில் பதிவான 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை குறித்த நிலையம் உத்தியோகபூர்வ அறிக்கையில் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர், வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம், இன்று (24) பிற்பகல் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவித்திருந்தது.

மாலை 5.10 மணிக்கு வெளியிடப்பட்ட நிலநடுக்க அறிக்கையின்படி, நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மாலை 4.36 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் 17.78°S அட்சரேகை மற்றும் 65.82°E தீர்க்கரேகை ஆயங்களில் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here