வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளை தடுக்கும் சட்டமூலம் வாக்கெடுப்பு மற்றும் திருத்தங்கள் இன்றி இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் மாலை 06.00 மணி முதல் 06.30 மணி வரை நடைபெற்றதன் பின்னர் இவ்வாறு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தொடர்பான செலவுத் தலைப்பும் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.








