கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 262,000ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 242,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,750 ரூபாவாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரிப்பைப் பதிவு செய்து வருகிறது.
உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3260.27 அமெரிக்க டொலராக நிலவுகிறது.








