காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் வதுளை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார்  வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here