கம்பஹா நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதித்துறை சேவைகள் ஆணையத்தால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் எதிர்வரும் திங்கட்கிழமை (09) அன்று அங்கு கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த நீதிமன்றத்தின் நீதவானாக கடமையாற்றிய பந்துல குணரத்ன விற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு இடமாற்றம் வழங்க நீதித்துறை சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய நீதவானாக கோசல சேனாதீரவை நியமிக்க இவ்வாறு நீதித்துறை சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here