இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 அக்டோபர் மாதத்தில் 3.2% அதிகரித்து 7,086 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. 2026 செப்டம்பர் மாதத்தில் இது 6,867 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த கையிருப்பில் சீன மக்கள் வங்கியுடனான பரிமாற்ற ஒப்பந்தத்திலிருந்து கிடைத்த வருமானமும் உள்ளடங்குவதாக வங்கி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here