நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் பலத்த மழையுடனான வானிலை இன்று முதல் தற்காலிகமாக குறைவடையக்கூடுமென வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென்  மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஹம்பாந்தோட்டை  தொடக்கம் பொத்துவில் வரையான அத்துடன் முல்லைத்தீவு  தொடக்கம் காங்கேசன்துறை,  மன்னார் ஊடாக புத்தளம்  வரையான   கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 கிலோமீற்றரிலும்  கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் . இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆகையினால்  கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர் என்று தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here