வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை  பெய்யக்கூடும்.மேலும்  இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

கண்டி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும்.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்  களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை,  மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என்றும்.

மத்திய மற்றும் சப்ரகமுவ  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும் என்றும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km  வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும் எனவும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார்  வரையான அத்துடன்  ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 – 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும் எனவே.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here