இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பிலிப்பிட்டிய – செவனகல வீதியில் இன்று சனிக்கிழமை (26.10.2024) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றின் மீது மோதி பின்னர் அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எம்பிலிப்பிட்டியிலிருந்து செவனகல நோக்கிப் பயணித்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது, காரில் பயணித்த சாரதி உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ள நிலையில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








