பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தானது இன்று (25) அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
பெலவத்தையில் இருந்து பொரளை நோக்கி பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி தியவன்னா கால்வாயில் விழுந்துள்ளது.
சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் குறித்த வாகனம் இராணுவத்தினரால் மீட்கப்பட்டதால் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








