Tuesday, June 9, 2026
No menu items!

போக்குவரத்து நெரிசல்

பொரளை மயான பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..!

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த மரத்தை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, இயன்றளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை..!

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட வீதிகளில் இன்று திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெறவுள்ளதோடு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள விசேட ஆராதனைகள் காரணமாக வாகன போக்குவரத்து நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

காற்றின் தரம் குறித்து அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (2) காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குக் காற்றின் தரச் சுட்டெண்...

கொழும்பு பிரதான வீதியில் பியர் கொள்கலன் விபத்து..!

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் பியர் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, எஹெலியகொடை மின்னான பகுதியில் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று மிதமான நிலையில் காற்றின் தரம்…

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் நேற்று வியாழக்கிழமை (06) காற்றின் தரக் குறியீடு மிதமான...

மிதமான நிலையில் காற்றின் தரம்..!

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மிதமான நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (04/03/2025) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம்...

மூடப்படும் குருணாகல் – புத்தளம் ரயில் கடவை ஊடான பகுதி..!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் 55ஆம் கட்டையில் உள்ள ரயில் கடவையில் திருத்தப்பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக குருணாகல் - புத்தளம் வீதியில் ரயில் கடவை  ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என இன்று வெள்ளிக்கிழமை (07/02/2025) இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்வே திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதால் நாளை சனிக்கிழமை (08/02/2025) மற்றும் நாளை...

கொழும்பில் ஆயுர்வேத மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யக்கல சந்தியில் ஆயுர்வேத மாணவர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

மாற்றங்களை விரும்பும் மக்கள் – ஜனாதிபதிக்கு கடிதம்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தி தருமாறு தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.ஸ்டீவென்சன் (கீதன்) குறித்த கடிதத்தை அனுப்பி ஊடகங்களிற்கு வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தினால் நலிவடைந்து வளர்ந்து வரும் மாவட்டம் என்பது தாங்கள் அறிந்ததே. இம்மாவட்டத்தின் நகர அபிவிருத்தியில்...

இராணுவ டிஃபென்டர் வாகனம் விபத்து!

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தானது இன்று (25) அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. பெலவத்தையில் இருந்து பொரளை நோக்கி பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி தியவன்னா கால்வாயில் விழுந்துள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் குறித்த வாகனம் இராணுவத்தினரால் மீட்கப்பட்டதால் பாராளுமன்ற...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img