சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வெங்காயத் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதும், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இளஞ்சிவப்பு வெங்காய இறக்குமதிக்கு அறவிடப்படும் 70 ரூபா வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here