இலங்கையில் பலர் திடீர் பணக்காரர்களாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறித்த நபர்கள் திடீர் பணக்காரர்களாக மாறுவதற்கு எந்த காரணமும் இல்லை என முறைப்பாடுகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கிடைக்கப்பெறும் ஒவ்வொரு முறைப்பாடு தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








