இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் உயர்ந்து வருவதாக இலங்கை விலங்குகள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது.

அந்தச் சங்கத்தின் தகவலின்படி, தெரு நாய்களின் எண்ணிக்கை தற்போது 2 முதல் 3 மில்லியன் வரை அதிகரித்துள்ளதுடன், இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகின்றன.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த விலங்கு நலன் மூலம் சமூகப் பாதுகாப்பிற்கான கண்டிச் சங்க செயலாளர் சம்பா பெர்னாண்டோ, இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பெண் நாய்கள் ஆண்டுக்கு இருமுறை குட்டி ஈனுவதால், நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வைக்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது இலங்கையில் ஒவ்வொரு எட்டு மனிதர்களுக்கும் ஒரு தெரு நாய் என்ற விகிதத்தில் அவற்றின் எண்ணிக்கை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here