இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன்களின் பாவனை அதிகரித்துவிட்டது. பல தகவல்களை நாம் ஸ்மார்ட்போனில் தான் சேமித்து வைப்போம்.

ஆனால், சில வேளைகளில் நாம் அதனை தொலைத்துவிடலாம் இல்லாவிட்டால் யாரேனும் அதனை திருடிவிடலாம்.

அவ்வாறு திருடப்படும் ஸ்மார்ட்போன்கள் முதலில் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் தொலைபேசியின் இருப்பிடத்தை நம்மால் அறிய முடியாது.

அதனால்தான் தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் பல அம்சங்களை வழங்கியுள்ளது.

அதாவது, தொலைபேசியை ஓஃப் செய்ய தனி கடவுச்சொல்லை டைப் செய்ய வேண்டும்.

அதாவது, திருடப்பட்ட தொலைபேசியை அன்லொக் செய்யாமல் ஸ்விட்ச் ஓஃப் செய்ய முடியாது. அதற்கு அன்லொக் டூ பவர் ஓஃப் எனும் அம்சத்தை ஒன் செய்ய வேண்டும்.

இதனால் கடவுச்சொல்லை டைப் செய்யாமல் தொலைபேசியை நிறுத்த முடியாது.

எப்படி ஒன் செய்வது,

  • தொலைபேசியில் செட்டிங்கை ஒன் செய்யவும்.
  • அதிலுள்ள பிரைவசி ஒப்ஷனை க்ளிக் செய்யவும்.
  • பிரைவசி செட்டிங்கில் அன்லொக் பவர் டூ ஒஃப் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here