சூரிய கதிர்கள் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து கருப்பாக மாறுகின்றன.

அந்தவகையில், உடனடியாக முகம் வெள்ளையாக மாற கற்றாழையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

1. தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
  • மஞ்சள்- 1 சிட்டிகை

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.

பின் இதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது அதை முகத்தில் தடவி கைகளால் மசாஜ் செய்யவும்.

சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை தண்ணீரில் கழுவவும்.

2. தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
  • முல்தானி மிட்டி- 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் முல்தானி மிட்டியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி உலர விடவும்.

இதை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், சருமத்தில் உள்ள தழும்புகள், பருக்கள், கரும்புள்ளிகளை அகற்றி சருமம் பளபளக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here