நாம் உண்ணும் உணவே மருந்து என்று பொதுவாக அனைவரும் கூறுவதுண்டு.
அந்த வகையில், இஞ்சி உடலுக்கு மிகவும் நல்லது.
இஞ்சியை தினமும் உணவில் சரியான அளவு சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி, புற்றுநோய் போன்ற எதுவும் வராது என ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாகவே இஞ்சி, செரிமானப் பிரச்சினை, மலச்சிக்கல், குடல் சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றை குணமாக்கும்.
இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள், மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி அழற்சி எதிர்ப்பு, உடலிலுள்ள கழிவுகளை அகற்றுதல் போன்றவற்றையும் செய்கிறது.
மேலும் இரத்தம் கெட்டியாகி உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
உடல் எடை குறைகிறது.
வளர்சிதையில் மாற்றம் ஏற்படுகிறது.
உடல் தோலின் பொலிவு அதிகமாகிறது.
மூட்டு தேய்மானம் தடுக்கப்படுகிறது.








