இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது.

தென்னாபிரிக்காவின் செயின்ட் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் குறித்த போட்டி இடம்பெறுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார இன்று (05) தனது 100வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களில் 100 விக்கெட்டுகளை குறைந்த போட்டிகளில் கைப்பற்றிய இரண்டாவது வீரராக பதிவாகியுள்ளார்.

லஹிரு குமார 33 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்

இலங்கைக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய புதிய வீரர் என்ற சாதனைப் புத்தகத்தில் லஹிரு குமார இடம்பிடித்துள்ளார்.

30 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்தி லசித் மலிங்கா முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here