வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை உள்ளடக்கிய உள்ளூராட்சி தேர்தல்கள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்திற்கு இன்று (11.12.2024) அறிவித்துள்ளார்.
முன்னைய வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்கி புதிய வேட்புமனுக்களை கோரும் வகையில் சட்ட திருத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த விசாரணை 2025 ஜனவரி 29, இல் திட்டமிடப்பட்ட நிலையில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழக்கு விளம்பரங்களை வெளியிடவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.








