Saturday, May 9, 2026
No menu items!

#topnews #srilankanews #tamilnews #srilanka #vettritv #vettrinews #trendingnews

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.93 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.41 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு..!

அம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ, மெதஆர பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது. அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் நேற்றைய தினம் வயலில் உழுதுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சிவனொளிபாத மலை யாத்திரை – விசேட வர்த்தமானி வெளியீடு..!

2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பமாகின்றது. இதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, சிவனொளிபாத மலை வளாகத்தில் தற்காலிக தங்குமிடங்களை அமைத்தல், பராமரித்தல், கட்டடங்கள் கட்டுதல், யாசகம் பெறுதல், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக்...

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு..!

பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்  அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபாவை அண்மித்துள்ளதாக அசேல சம்பத்...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

ரஷ்ய அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக நேற்றைய தினம் (13.12.2024) கையளிக்கப்பட்ட 55 000 மெற்றிக்தொன்  MOP உரம் (எம்.ஓ.பி ) கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக மாவட்டத்திலுள்ள பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு இன்று கொண்டு வரப்பட்டன. விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன்...

விண்கல் மழை பொழிவு இன்று இரவு..!

இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13.12.2024) மற்றும் நாளை (14.12.2024) இரவு காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதன் முழுமையான அனுபவத்தை நாளை இரவு வடகிழக்கு வானில் பொது மக்கள் காண முடியும். இரவு 9 மணிக்குப்...

ரயில் சேவையில் புதிய திட்டங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு..!

ரயில் ஊடாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு, முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட  சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (13.12.2024) காலை இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திராய்மடு, முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளையின் தந்தையான கோடீஸ்வரன் வேணுராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முகத்துவாரம் பகுதியில்...

கடமையினை பொறுப்பேற்ற ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்..!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள்   யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13.12.2024) காலை 08.45 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக  உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ...

யாழில் பரவும் மர்ம காய்ச்சல் – வெளியானது அதிர்ச்சி தகவல்..!

யாழ்.மாவட்டத்தில் இருவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், குறித்த நோய் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img