ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள், நிறுவன மற்றும் மனித வள சவால்களை நிவர்த்தி செய்வதன் மூலம் அதன் அமுலாக்கத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நேற்று (08)அன்று ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது பேசிய அவர், மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஆட்சேர்ப்பை எளிதாக்கும், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில பதிப்புகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்கும் மற்றும் அமலாக்க சிரமங்களை நிவர்த்தி செய்யும் என குறிப்பிட்டார்.

ஊழல் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளை மீட்பதற்கான வழிமுறைகளையும் திருத்தங்கள் வலுப்படுத்தும் என்று அமரசூரிய கூறினார்.

அத்துடன் மாற்றங்கள் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை பலவீனப்படுத்தும் என்ற கூற்றுக்களை அவர் நிராகரித்தார்.

எதிர்க்கட்சி பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரத்தை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், தவறாகப் பயன்படுத்தப்பட்ட பொது நிதியை மீட்பதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here