பாரிஸ் ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் இன்று(01.08) ஸ்டே டி பிரான்ஸ் அரங்கில் ஆரம்பமாகவுள்ளன. இதில் இலங்கையின் மூன்று வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

தடகள போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய தூர ஓட்ட வீராங்கனை தரூஷி கருணாரத்ன முதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

ஹான்சூவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தரூஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஆரம்ப சுற்றில் நாளை(02.08) விளையாடவுள்ளார்.

மேலும் அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றில் ஓகஸ்ட் 4 ஆம் திகதி பங்கேற்கவுள்ளதோடு டில்ஹானி லேகம்கே எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here