என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலியில் உள்ள பிரதேச மக்கள் முன்னிலையில் இன்று(26) தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் வசித்த காலி கபுஹெம்பலா இல்லத்திற்குச் சென்றதுடன், பிரதேசவாசிகளும் வீட்டைச் சுற்றி திரண்டிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்க விக்டர் ஐவனின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு மீண்டும் புறப்படுவதற்கு தயாரான போது, அருகில் வந்த பிரதேச மக்களுக்கு உண்பதற்கு சோறு இல்லை எனவும் தேங்காய் இருநூறு ரூபாவிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டனர் .
இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிடம் உரையாற்றும் போது, “ஐயா எங்கள் நம்பிக்கை” என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் உரையாற்றியரணில் விக்கிரமசிங்க, என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றார்.








