எப்பாவல, எலியாதிவுல்வெவ பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்குள் நுழைந்த முதலை ஒன்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து தலாவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சனிக்கிழமை (22) இரவு 10.00 மணியளவில் எலியாதிவுல்வெவ குளத்திற்கு அருகில் குறித்த உயிரினம் காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து கிராம மக்களின் உதவியுடன் முதலை பிடிக்கப்பட்டு, மரத்தில் கட்டப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு நேற்று அது முறையாக ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு முன்னரும், மற்றொரு முதலையும் அங்கிருந்த முட்டைகள் மற்றும் குட்டிகளும் பிடிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
புதிதாக பிடிக்கப்பட்ட முதலை வில்பத்து சரணாலயத்தில் விடுவிக்கப்படும் என வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
படம் : AI








