2027 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் இந்திகா குமாரி லியனகேவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஓகஸ்ட் முதலாம் திகதி நடத்தப்பட உள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சை 2027 ஓகஸ்ட் 03 ஆம் திகதி முதல் 2027 ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை நடைபெறும்.

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை 2027 அக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சை 2027 டிசம்பர் 07 ஆம் திகதி முதல் 2027 டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here