எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமானது.

அதன்படி, இன்று முதல் செப்டம்பர் 12 ஆம் திகதி பிற்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை தொடரும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம், 2019 நவம்பர் முதல் அமுலுக்கு வரும் வகையில், நான்காவது தடவையாக வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, 06 மார்ச் 2024 இல் முடிவடைந்தது.

நான்காவது தடவையாக வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால், உள்ளூராட்சி சபை சட்டத்தின் பிரகாரம், விசேட ஆணையாளர் பொறுப்பேற்றார்.

எவ்வாறாயினும், ஆகஸ்ட் 26, 2024 அன்று, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அட்டவணையை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here