அம்பலாந்தோட்டை, மதயமலலந்த, கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (09.09) யானை தாக்கியதில் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மதயமலலந்த பகுதியில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உபுல் பிரியந்த என்ற 48 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால், காலையில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கிராம மக்களுடன் அந்த இடத்திற்கு சென்ற போதே இந்த தாக்குதல் நடந்ததாகவும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் யானைகள் தொடர்ந்து அத்துமீறி நுழைவதால் விவசாயம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சிதரங்ககம விகாரையின் தலைவர் சுகுணசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here