காலி,அம்பலங்கொட,பொன்னடுவ பகுதியில் சமூக ஊடகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ​​மூன்று பெண்கள் உட்பட 28 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சோதனையை அம்பலங்கொட பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து நடத்தியுள்ளனர்.

இதன்போது,225 மில்லிகிராம் கொக்கைன், 8.125 கிராம் ஐஸ், 2.4 கிராம் கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு விருந்தில் கலந்து கொண்டவர்கள் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் எனவும், அம்பலங்கொட, பலப்பிட்டிய, ஹோமாகம மற்றும் பேருவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here