மீன் ஏற்றிச் சென்ற சிறியரக லொறியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று (13) அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியினூடாக, அக்கரைப்பற்றுலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றும், மட்டக்களப்பு கல்முனை வீதி வழியினூடாக மீன் ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீன் ஏற்றிச் சென்ற லொறி, வேகக் கட்டுப்பாட்டின்றி பயணித்தமையினாலேயே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக விபத்தினை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







