இலங்கை பொலிஸ் மா அதிபரை படுகொலை செய்வதற்காக சதி திட்டம் இடம்பெற்றதாக வெளியிட்ட கருத்து தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 10.30 மணிக்கு குறித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக புலனாய்வு பணியகம் முன் ஆஜராகுமாறு சாகர காரியவசத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.
எனினும்,குற்றவியல் புலனாய்வு பணியகம் முன் ஆஜரானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.








