கொய்யா பழத்திற்கு இணையான அளவு ஊட்டச்சத்துக்கள் கொய்யா இலைகளிலும் உண்டு.
வைட்டமின்கள் – கொய்யா இலைகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டு வைட்டமின்களும் அதிக அளவில் இருக்கின்றன.
மினரல்கள் – மினரல்களைப் பொருத்தவரையில் இரும்புச்சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. முக்கியமான பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது.
ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் – ஆற்றல் வாய்ந்த ஃபிளவனாய்டுகள், டேனின்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் கொய்யா இலையில் அதிகமாக இருக்கின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கு கொய்யா இலை தரும் நன்மைகள்

நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் கொய்யா இலை
கொய்யா இலைகளில் உள்ள ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் தன்மை கொ்ணடது. நோயெதிர்ப்பு ம்ணடலம் பலமாக இருப்பதால் நோய்த் தொற்றக்கள் ஏற்படாமலும் நோய்களில் இருந்து பாதுகாக்கவும் செய்யும்.
ஜீரண மண்டல ஆரோக்கியம் மேம்பட கொய்யா இலை
கொய்யா இலைகளில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இவை குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் நுண்கிருமிகளை அழிக்கும். அதேபோல குடலில் ஜீரணத்தைத் தூண்டுவதற்குத் தேவையான என்சைம்களும் குடல் பாக்டீரியாக்களையும் தூண்டி ஜீரண ஆற்றலை மேம்படுத்தும். இது மலத்தை இறுகவிடாமல் தடுத்து, மலமிளக்கியாக செயல்படும். அதனா்ல மலச்சிக்கல் பிரச்சினையும் தீரும்.
உடல் எடையை குறைக்கும் கொய்யா இலை
கொய்யா இலைகள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும். அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவி செய்து உடல் எடையைக் குறைக்க உதவி செய்கிறது.
நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை
நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது கொய்யா இலை. ரத்த குளுக்கோஸ் அளவை சமன்செய்து, உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொய்யா இலை
கொய்யா இலைகள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்யும். இது கார்டியோ வாஸ்குலர் நோய்கள் வராமல் தடுக்க உதவி செய்யும்.
புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் கொய்யா இலைகள்
கொய்யா இலைகளில் ஃபிளவனாய்டுகள் உள்ளிட்ட ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கினறன. இவை உடலில் உள்ள ஃப்ரீ – ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவை. அவை புற்றுநுா்ய செல்களையும் தாக்கி அழிக்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொய்யா இலை
கொய்யா இலைகளில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் ஏ. இந்த வைட்டமின் ஏ தான் கண்களுக்கான வைட்டமின் என்று சொல்லலாம். அதனா்ல் தான் இதை கரோட்டின் என்று அழைக்கிறோம். கொய்யா இலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது கண் பார்வையைக் கூர்மையாக்கும்.
மன அழுத்தம் குறைக்கும் கொய்யா இலை
கொயயா இலைக்ள மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவை. இந்த கொய்யா இலைகளை எடுத்துக் கொளளும்போது கார்டிசோல் உள்ளிட்ட ஹார்மோன் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தம் ஏற்படுவதைத் தடு்க்கிறது.
மாதவிடாய் வலியை குறைக்கும் கொய்யா இலை
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வயிற்றுப் பிடிப்புகள், கடுமையான உடல் வலி மற்றும் வயிற்று வலி ஆகியவற்றைக் குறைக்கும் தன்மை கொய்யா இலைக்கு உண்டு. இதை டீ யாக எடுத்துக் கொள்ளும்போது வலி குறைந்து இதம் தரும்.









